தண்ணீர் என நினைத்து மண்ணெண்ணெயை குடித்த குழந்தை

37
child
Advertisement

கேரளா மாநிலம் கொல்லம் பையாலக்காவு பகுதியை சேர்ந்தவர்கள் கிருஷ்ணபிள்ளை – ரேஷ்மா தம்பதி. இவர்களின் ஒன்றரை வயது குழந்தை ஆரூஷ், தவிழ்ந்து சென்று பாட்டிலில் இருந்த மண் எண்ணெய்யை தண்ணீர் என நினைத்து குடித்ததாக கூறப்படுகிறது.

குழந்தை மயங்கி விழுந்ததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் ஆருஷை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பரிசோதனையில் குழந்தை மண் எண்ணெய் குடித்தது தெரியவந்தது.

Advertisement

இருப்பினும் தீவிர சிகிச்சைக்கு பின் ஆரூஷ் பரிதாபமாக உயிரிழந்தான்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.