கனமழை காரணமாக கபினி, கே.ஆர்.எஸ். அணை வேகமாக நிரம்பி வருவதால், காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக கிருஷ்ணராஜசாகர் அணை முழு கொள்ளளவை எட்டவுள்ளது. அதன்காரணமாக கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 10 ஆயிரம் கன அடி முதல் 25 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் திறந்துவிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தண்ணீர் திறந்து விடப்பட உள்ளதால் காவிரி கரையோர மக்கள் ஆற்றில் இறங்க வேண்டாம் என்றும் பாதுகாப்பாக இருக்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். நீர்திறப்பின் அளவு மேலும் அதிகரிக்க கூடும் என்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.