அரசு விழாவாக கொண்டாடப்பட்ட கருணாநிதி பிறந்த நாள்

417

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்த நாள் விழா நாகை மாவட்டம் திருக்குவளையில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

கருணாநிதி பிறந்த இல்லத்தில் நடைபெற்ற பிறந்தநாளையொட்டி, அரசு சார்பில் அவரது திருவுருவ சிலைக்கு மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவர் கௌதமன் ஆகியோர் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து திமுகவினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இதேபோல் திருக்குவளையில் பல்வேறு பகுதிகளில் கருணாநிதியின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்தும், இனிப்புகள் வழங்கியும் திமுக தொண்டர்கள் அவரது பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.