அணையின்  30 அடி உயர சுவற்றிலிருந்து கீழே விழுந்த இளைஞர்

33
Advertisement

கர்நாடகா  மாநிலம் சிக்கபல்லாபுரா மாவட்டத்தில்,அமைந்தியுள்ளது ஸ்ரீனிவாஸ் சாகர் அணை.இங்கு மக்கள் வந்துசெல்வது வழக்கம்.எந்த தேவையற்ற செயல்களிலும் இந்து ஈடுபடக்கூடாது என பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்  வழங்கப்பட்டு வரும் நிலையில்,

இளைஞர் ஒருவர் அணையின் சுவற்றில் ஏற முயன்றுள்ளார்.இதில் உள்ள  ஆபத்தை உணர்ந்த மக்கள் அவரை தடுத்து உள்ளனர்.ஆனால் அவர்கள் சொல்வதை கேட்காமல் 30 அடியில் சாய்வாக உள்ள சுவற்றின் மீது சற்று தூரம் ஏறிவிட்டார்

ஆனால் குறிப்பிட்ட  தூரத்திற்கு அப்பறம் மேல ஏறவோ அல்லது கீழே இறங்கவோ சிரமப்பட்ட அந்த நபர்,சற்று நேரத்தில் நிலைதடுமாறி சரிந்து கீழே உள்ள கல்லின்  மேல் விழுந்தார்.

Advertisement

கீழே விழந்ததில் படுகாயமடைந்த அவரை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.அவர் கீழே விழும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது