கழுதை பண்ணை வைத்த ஐ.டி ஊழியர்

  56
  Advertisement

  பொதுவாக,படித்தவர்கள் படித்த படிப்பிற்கு தான் பணிக்கு செல்ல வேண்டும் என வைராக்கியமாக இருப்பார்கள்.அதிலும் சிலர், குடும்ப சூழல் காரணமாக கிடைத்த வேலைக்கு செல்வார்கள்.இங்கு ஒருவர் மென்பொருள் நிறுவனத்தின் பணியை தூக்கி வீசிவிட்டு “கழுதை பண்ணை” வைத்துள்ளார்.காரணத்தை கேட்டு நீங்களே சொல்லுங்க இது சரியா ? தவறா ? என்று.

  கர்நாடகாவின் தக்ஷினா மாவட்டத்தை சேர்ந்த  42 வயதான ஸ்ரீனிவாச கவுடா, BA பட்டதாரியான இவர் பட்டப்படிப்பு முடித்தபின் மென்பொருள்  நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார்.கால்நடை வளர்ப்பில் ஈர்க்கப்பட்ட இவர் 2020 ஆம் ஆண்டு தன் மென்பொருள் பணியை விட்டுவிட்டு  2.3 ஏக்கர் நிலத்தில் ஒருங்கிணைந்த விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு, கால்நடை சேவைகள், பயிற்சி மற்றும் தீவன மேம்பாட்டு மையமான ஐசிரி பண்ணைகளை முதன்முதலில் தொடங்கினார்.

  Advertisement

  அதைத்தொடர்ந்து , ஜூன் 8 ஆம் தேதி, கவுடா  20 கழுதைகளை கொண்டு கழுதை பால் பண்ணையை திறந்துள்ளார்.இது குறித்து அவர் கூறுகையில், கழுதை பால் சுவையானது, மிகவும் விலை உயர்ந்தது மற்றும் மருத்துவ குணம் கொண்டது.

  கழுதை பாலை  பாக்கெட்டுகளில் மக்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ள அவர் , 30மிலி பால் பாக்கெட் ரூ.150 என்றும், மால்கள், கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் மூலம்  சப்பளை செய்யப்போவதாக கூறுகிறார்.மேலும் ,அழகு சாதனப் பொருட்களுக்கு பயன்படுத்தப்படும் கழுதைப்பாலை விற்கவும் திட்டமிட்டுள்ளார்.இந்நிலையில்  17 லட்சம் மதிப்பிலான ஆர்டர்கள் ஏற்கனவே பெறப்பட்டுள்ளன என்று கூறியுள்ளார் கவுடா.