“தமிழ்நாடு எதிர்த்தாலும் செய்தே தீருவோம்” – முதலமைச்சர் உறுதி

tn
Advertisement

தமிழ்நாடு எதிர்த்தாலும் மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை உறுதிபட தெரிவித்துள்ளார்.

நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி பெங்களூரு மாநகராட்சி சார்பில் நடந்த சுதந்திர தின விழாவில் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

அப்போது பேசிய அவர் கொரோனா 3ம் அலையை எதிர்கொள்ள கேரளா, மராட்டிய எல்லையிலுள்ள 8 மாவட்டங்களிலும் கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்தாலும் மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் பின் வாங்கும் பேச்சிற்கே இடமில்லை என உறுதிபட தெரிவித்தார்.

Advertisement