ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் விபத்தில் உயிரிழப்பு!

236
Advertisement

கர்நாடகாவில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.

மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த குடும்பத்தினர் கல்புரகி மாவட்டத்தில் உள்ள கோவிலுக்கு சென்று விட்டு, மீண்டும் காரில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

அப்போது, கார் ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததால், சாலையோர மரத்தில் கார் மோதியது.

Advertisement

இந்த விபத்தில், கார் நொறுங்கியது.

காரில் இருந்த 4 பெண்கள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

படுகாயம் அடைந்த 3 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து அப்துல்புரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.