கர்நாடகாவில் பயங்கரவாதி ஒருவன் கைது

244

ஜம்மு காஷ்மீர் கிஸ்த்வார் மாவட்டத்தை சேர்ந்த  தாலிப் ஹூசைன் என்பவர், 2016ல் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பில் இணைந்தார்.

அந்த இயக்கத்திற்காக ஆட்களை சேர்த்து வந்தார்.

அவரை பாதுகாப்பு படையினர் தேடி வந்த நிலையில், அவர் தலைமறைவானார்.

அவருக்கு 2 மனைவிகள். ஒரு மனைவி காஷ்மீரில் வசித்து வருகிறார். மற்றொரு மனைவியுடன், ஹூசைன் கடந்த 2 ஆண்டுகளாக, கர்நாடக தலைநகர் பெங்களூருவின் ஸ்ரீராமபுரா பகுதியில் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார்.

இது குறித்து கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் கர்நாடகா வந்த காஷ்மீர் போலீசார், ஹூசைனை பெங்களூரு போலீசார் உதவியுடன் கைது செய்தனர்.

இதனையடுத்து, பெங்களூருவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.