நுபுர் சர்மாவிற்கு ஆதரவு தெரிவித்த கங்கனா ரணாவத்

283

நபிகள் நாயகம் குறித்து நுபுர் சர்மா தெரிவித்த கருத்துக்கு உலக அளவில் கடும் கண்டனம் எழுந்துள்ள நிலையில், சர்ச்சைகளுக்கு பெயர்போன நடிகை கங்கனா ரணாவத் நுபுர் சர்மாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் இன்ஸ்டாகிரம் மூலம் நுபுர் சர்மாவிற்கு தனது ஆதரவினை தெரிவித்துள்ளார்.

நுபுர் சர்மாவிற்கு அவரது கருத்தினை கூறுவதற்கு அனைத்தும உரிமை உள்ளதாக தெரிவித்துள்ளார்.

நுபுர் சர்மா கூறிய கருத்தில் தவறு இருந்தால் அதனை சட்டத்தின் மூலம் தான் அணுக வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அதைவிடுத்து, கொலை மிரட்டல் விடுப்பது கண்டனத்திற்குரியது என்று கூறியுள்ளார்.

இது ஆப்கானிஸ்தான் அல்ல என்றும், இந்தியாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஆய்வு செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.