காஞ்சிபுரம்: நெடுஞ்சாலை துறையினரால் இரண்டு பாலங்கள் சீரமைக்கும் பணிகள் நடைகிறது.

275

காஞ்சிபுரம் அருகேயுள்ள பிரதான சாலையில், நெடுஞ்சாலை துறையினரால் இரண்டு பாலங்களை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் நெடுஞ்சாலையில் இரண்டு பாலங்கள் உள்ளன. இந்த சிறுபாலங்கள் பழுதடைந்து, சில வருடங்களாக போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தது. இதனால், சிறுபாலங்களை விரிவுபடுத்தி, தரமான முறையில் சீரமைத்து தரவேண்டுமென வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், ஒருங்கிணைந்த சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பாலங்களை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது