அரசு தொடக்கப் பள்ளியில் நடத்தப்பட்ட ஊட்டச்சத்து குறைபாடு கண்டறியும் முகாம்

371
Kanchipuram
Advertisement

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் சேந்தமங்கலம் ஊராட்சியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் ஊட்டச்சத்து குறைபாடு கண்டறியும் முகாம் நடத்தப்பட்டது.

இந்த முகாமில் ஊட்டச்சத்து குறைபாடுகள் உள்ள குழந்தைகளை கண்டறிந்து அந்த குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய உணவு முறைகள் குறித்து பெற்றோர்களுக்கு கவுன்சிலிங் மற்றும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த முகாமில் மருத்துவர்கள், செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.