ஜாமீன் வழங்கப்பட்ட கைதியை சிறை உணவகம் வழியாக வெளியே அனுப்பிய சிறை வார்டன்கள்

132

காஞ்சிபுரத்தை சேர்ந்த ரவுடி வசந்த், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், வசந்த் கடந்த சனிக்கிழமை சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்தார்.

அப்போது வசந்த்தை மற்றொரு வழக்கில் கைது செய்வதற்காக, காஞ்சிபுரம் போலீசார் சிறை வாசலில் காத்திருந்தனர்.

Advertisement

இதனை அறிந்த சிறை வார்டன்கள் ரமேஷ் மற்றும் பூபதி ஆகியோர், ரவுடி வசந்தை சிறைச்சாலை உணவகம் வழியாக வெளியே அனுப்பியுள்ளனர்.

இதனால் வசந்த்தை கைது செய்வதற்காக காத்திருந்த காஞ்சிபுரம் போலீசார் ஏமாற்றமடைந்தனர்.

இதுகுறித்து விசாரணை நடத்திய சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார், சிறை வார்டன்கள் இருவரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.