லாரி டயர் மோதி ஒருவர் பலி

127

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கீழே படப்பையை சேர்ந்தவர் முரளி.

ஆட்டோ ஓட்டுநரான முரளி, கடந்த ஒன்றாம் தேதியன்று படப்பை பஜாரில் மளிகைப் பொருட்களை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு சாலை ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது முரளியின் பின்னால் வந்த கனரக லாரியின் பின்பக்க டயர் கழன்று ஓடி வந்து முரளியின் பின்பக்கம் பயங்கரமாக மோதியது.

Advertisement

இதில் படுகாயமடைந்த முரளியை மீட்டு, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மூன்று நாட்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்த முரளி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும் விபத்து தொடர்பாக தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுனரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே விபத்துக்குள்ளான பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி ஏற்படுத்தியுள்ளது.