பொதுமக்களை நோக்கி கையை ஓங்கிய அமைச்சர்

202

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பாப்பாங்குழி ஊராட்சிக்கு உட்பட்ட வடந்தாங்கல் ஏரியை புனரமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டும் விழா மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது.

அமைச்சர் த.மோ அன்பரசன் கலந்து கொண்டு 8 லட்சத்து 86 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகளை தொடக்கி வைத்தார்.

அப்போது, ராமானுஜபுரம் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள், குளம், ஏரியில் உள்ள மீன்கள் பொதுப்பணி துறை சார்பாக ஏலம் விடக்கூடாது என்றும் கிராம மக்கள் சார்பாக ஏலம் விடுவதை செயல்படுத்த கோரி, அமைச்சர் த.மோ அன்பரசனிடம் மனு அளித்தனர்.

அப்போது, பிரச்சனை என்னவென்று அமைச்சர் கேட்க, மக்கள் கூறிய விஷயங்கள் சரியாக புரியவில்லை என தெரிகிறது.

தெளிவாக சொல்லுமாறு கூறியும், மக்கள் ஆளுக்கொரு பதிலை சொன்னதால், குழப்பமடைந்த அமைச்சர் த.மோ அன்பரசன், கையை ஓங்கி ஒருவர் ஒருவராக கூறுங்கள் என்று கோபம் காட்டியதால் பரபரப்பு நிலவியது.