மனைவி இறந்த சோகத்தில் கணவர் தற்கொலை

340

காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் ஒன்றியம் காவணிப்பாக்கம் கிராமத்தில் மாரிமுத்து-மல்லிகா  என்ற வயதான தம்பதியினர் வசித்து வந்தனர்.

இந்நிலையில், மாரிமுத்துவின் மனைவி மல்லிகா நேற்று முன்தினம்  உடல்நலக்குறைவால் வீட்டிலேயே மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது.

இதனால், மிகுந்த மன உளைச்சல் அடைந்த மாரிமுத்து, வீட்டிலுள்ள தனியறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சாலவாக்கம் போலீசார், தம்பதியர் இருவரது சடலங்களையும் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

இதனிடையே, தம்பதியின் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.