வெளியானது “விக்ரம்” படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் அப்டேட் !!

374
Advertisement

உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கும் “விக்ரம்” படத்திற்கு வேற லெவலில் ப்ரோமோஷன் செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில் விக்ரம் படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது.

விக்ரம் படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் ஆகிவை வரும் 15 ஆம் தேதி வெளியாக ஆக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியீட்டு உள்ளது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் நடித்துள்ள படம் விக்ரம். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.இப்படம் வருகிற ஜூன் 3-ம் தேதி வெளியாகிறது.

இதனையொட்டி படத்திற்கான புரொமோஷன்களை ரயில் விளம்பரத்தில் இருந்து தொடங்கியிருக்கின்றனர். அதன் தொடர்ச்சியாக இன்றும் இந்த அப்டேட் வெளியாகியுள்ளது.தற்போது கமலின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.