லோகேஷுக்கு அறிவுரை வழங்கிய கமல்

119
Advertisement

விக்ரம் படம் வெளியானது முதலே வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மூன்றே நாட்களில் உலகம் முழுவதும் 150 கோடியும் இந்தியாவில் மட்டும் 100 கோடியும் வசூலை அள்ளியுள்ளது.

இதையடுத்து படத்தை இயக்கிய லோகேஷ், விக்ரம் படத்திற்கும் தனக்கும் மக்களிடம் இந்த அளவிற்கு அங்கீகாரம் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கவில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும், அதிகமாக கிடைத்துள்ள அன்பு தன்னை உணர்ச்சிவசப்பட செய்துள்ளதாகவும் தனது டிவிட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தார்.

Advertisement

லோகேஷின் பதிவை மேற்கோள் காட்டி, ரசிகர்களிடம் பெற்ற அன்பு கடனை திருப்பி செலுத்த கடின உழைப்பு மிகவும் முக்கியம் என கூறியுள்ள கமல், இப்போது போல உழைத்து கொண்டே இருந்தால் பெரிய வெற்றியை அடைய முடியும் என தெரிவித்துள்ளார்.

மக்களின் அன்பு தான் தனக்கும் சக்தியாக செயல்படுவதாக பகிர்ந்துள்ள கமல், தனது தயாரிப்பு நிறுவனம் லோகேஷுக்கு தொடர்ந்து உறுதுணையாக இருக்கும் என உறுதியளித்துள்ளார்.