லோகேஷுக்கு கார் பரிசளித்த கமல்

201
Advertisement

படம் வெற்றி பெற்ற உடன் சம்பந்தப்பட்ட இயக்குநர்களுக்கோ நடிகர்களுக்கோ பரிசு மழை பொழிவது தமிழ் சினிமா வட்டாரங்களில் புதிதல்ல.

அண்மையில், லோகேஷ் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளை பெற்றதோடு சிறப்பான வசூலையும் அள்ளி குவித்துள்ளது.

இந்நிலையில், படத்தின் தயாரிப்பாளரும் கதாநாயகனுமான கமல் ஹாசன், லோகேஷுக்கு Lexus சொகுசு கார் ஒன்றை பரிசளித்துள்ளார். இந்த வகை காரின் ஷோரூம் விலை 60 லட்சத்தில் துவங்கி 2.5 கோடி வரை உள்ளது.

Advertisement

இது மட்டும் இல்லாமல், படத்தில் பணியாற்றிய 13 துணை இயக்குநர்களுக்கும், கமல் ஹாசன் புதிய பைக்குகளை பரிசளித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.