பட்டியல் இனத்தை சேர்ந்தவர் என்பதால் அதிகாரிகள் அவமரியாதை செய்வதாக காடையாம்பட்டி ஒன்றிய குழு தலைவி வேதனை தெரிவித்துள்ளார்.

37

பட்டியல் இனத்தை சேர்ந்தவர் என்பதால் அதிகாரிகள் அவமரியாதை செய்வதாக காடையாம்பட்டி ஒன்றிய குழு தலைவி வேதனை தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி ஒன்றிய குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது, தான் பட்டியல் இனத்தை சேர்ந்தவர் என்பதால் அதிகாரிகள் அவமரியாதை செய்வதாக ஒன்றிய குழு தலைவி மாரியம்மாள் வேதனை தெரிவித்தார். இதே நிலை நீடித்தால் தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தற்போது இந்த வீடியோ வலை தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.