பிரபல பாப் இசை பாடகர் ஜஸ்டின் பீபர் முக முடக்கவாத நோயால் பாதிப்பு

50

பிரபல பாப் இசை பாடகர் ஜஸ்டின் பீபர், டொரண்டோவில் நடைபெற இருந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்கு முன் ரசிகர்களுக்கு அவர் ஒரு வீடியோவை வெளியிட்டார்.

அதில் தனக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்றும் ரசிகர்களாகிய உங்களை தான் விரும்புகிறேன், உங்களுடைய பிரார்த்தனையில் தனக்கும் இடம் கொடுங்கள் எனவும் தலைப்பிட்டு உள்ளார்.

இதனிடையே ஜஸ்டின் பீபருக்கு “ராம்சே ஹன்ட் சிண்ட்ரோம்” பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement

இதனால், ஒரு காதின் பக்கத்தில் உள்ள முக நரம்பு பாதிக்கப்படும்.

மேலும் முகம் முடக்குவாதம் ஏற்படுவதுடன் கேட்கும் திறனையும் இழக்க கூடிய ஆபத்து உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.