தமிழகம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் உள்ள 57 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஜூன் முதல் ஆகஸ்ட் மாதங்களில் முடிவடைய உள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை 6 காலியிடங்கள் உள்ளன.
விரைவில் குடியரசு தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மாநிலங்களவை உறுப்பினர்களின் வாக்கு தேவை என்பதால், 57 இடங்களுக்கான தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது.
அதன்படி ஜூன் மாதம்10ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது.
இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்கி வரும் 31ஆம்தேதியுடன் முடிவடைகிறது.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், நாளை காலை முதல் வேட்புமனு படிவங்களைப் பெற்று, பூர்த்தி செய்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.