ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு மத்தியில் வெளியாகும் “ஜாலியா ஜிம்கானா”

96
Advertisement

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், விடிவி கணேஷ், யோகி பாபு, சதீஷ் போன்ற பல முக்கிய நடிகர்கள் நடிப்பில் வெளியானது தான் “பீஸ்ட்” திரைப்படம்.சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.

ரசிகர்களின் மகிந்த எதிர்ப்பிற்கு மத்தியில் வெளியான இந்த படத்திற்கு சில நெகடிவ் கமெண்ட்ஸ் வந்தாலும், வசூலில் பல சாதனைகளை படைத்து வருகிறது. அந்த வகையில், உலகம் முழுவதும் 230கோடிக்கு மேல் வசூல் செய்திருந்தாகவும் தகவல்கள் வெளியானது.

Advertisement

இந்நிலையில் படத்தில் இடம்பெற்ற விஜய் ஜாலியா ஜிம்கானா என்ற பாடல் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றியிருந்தது. இதற்கான வீடியோ பாடல் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில்.

ஜாலியா ஜிம்கானா வீடியோ பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் ப்ரோமோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர். இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.