அமைச்சரை சந்திக்க வந்த மாணவிகள் மீது தடியடி

392
attack
Advertisement

ஜார்க்கண்ட் மாநிலத்தில் அமைச்சரை சந்திக்க சென்ற மாணவிகள் மீது போலீசார் தடியடி நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை மறுபரிசீலனை செய்யக்கோரி, தன்பத் மாவட்டத்தில் தேர்வு எழுதிய மாணவிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அப்போது, ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த சுகாதாரத்துறை அமைச்சர் பன்னா குப்தாவை சந்திக்க வேண்டும் என்று மாணவிகள் கோரிக்கை விடுத்தனர்.

Advertisement

போலீசார் அனுமதிக்க மறுத்ததால், அதிகாரிளுக்கும், மாணவிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

மாணவிகள் கலைந்துபோக மறுத்ததால், போலீசார் தடியடி நடத்தி மாணவிகளை கலைந்து போக செய்தனர்.

இந்த காட்சிகள் இணையதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.