வந்தாச்சு “பாக்கெட் டாய்லெட்”

50
Advertisement

ஜப்பான் நிறுவனம் ஒன்று “போர்ட்டபிள் டாய்லெட்டை” அறிமுகம் செய்துள்ளது.கழிப்பறை  பலநேரங்களில்  சிலருக்கு பிரச்சனையாகி விடுகிறது.இதனை கருத்தில்கொண்டு, உலகில் மிக சிறிய கழிப்பறையை உருவாக்கியதாக கூறுகிறார் இந்நிறுவனத்தின் தலைவர்.

7 செ.மீ நீளமும் 6.5 செ.மீ அகலமும் கொண்ட இந்த  சிறிய கழிப்பறை எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம். இது ஒரு சிறப்பு வகை பையைக் கொண்டுள்ளது,  வலுவான இழைகளால் ஆனது மற்றும் ஒரு முறை பயன்படும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்த பாக்கெட்டில் உள்ள பையை  கழிப்பறை இருக்கை அல்லது குப்பைத் தொட்டியில் பொருத்தலாம்.உபயோகித்த பையை மூடிய பிறகு, ஒரு வாரத்திற்கு எந்த வாசனையும் வெளியேறாது என்கிறது இந்த நிறுவனம்.

இந்நிறுவனம் இதுவரை 50,000 பாக்கெட் டாய்லெட்டுகளை விற்றுள்ளதுடன், போரினால் பாதிக்கப்பட்ட நாடான உக்ரைனுக்கு 6000 பாக்கெட் டாய்லெட்டுகளை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.