சி.எஸ்.கே கேப்டனாக முதல் போட்டியையே தோல்வியோடு தொடங்கியிருக்கும் ஜடேஜா

466
Advertisement

ஐ.பி.எல் 15 வது சீசனின் தொடக்க போட்டியாக அமைந்த நேற்றைய ஆட்டம் மும்பையின் வான்கடே மைதானத்தில் நடந்திருந்தது. ‘Batting Paradise’ என மேத்யூ ஹைடனின் கணீர் குரலில் பிட்ச் ரிப்போர்ட் ஒலிக்க ஆட்டம் தொடங்கியிருந்தது. கடைசியாக சென்னையும் கொல்கத்தாவும் இதே வான்கடே மைதானத்தில் ஆடியபோது கூட அந்த ஆட்டம் 200+ ஸ்கோரை கொண்ட ஆட்டமாகவே அமைந்திருந்தது.

பேட்ஸ்மேன்களின் சொர்க்கப்புரி என ஹைடன் உதிர்த்த வார்த்தைகளுக்கு ஏற்பவே கொல்கத்தா அணியின் புதிய கேப்டனான ஸ்ரேயாஸ் ஐயர் டாஸை வென்று பந்துவீச்சை தேர்வு செய்திருந்தார். எவ்வளவு பெரிய டார்கெட்டாக இருந்தாலும் இந்த பிட்ச்சில் அதை சேஸ் செய்துவிட முடியும் என்ற நம்பிக்கை ஒரு பக்கமும் இரண்டாவதாக பந்துவீசும் அணியின் தாக்கத்தினால் பாதிக்கப்படும் என்கிற கணிப்பும் ஸ்ரேயாஸின் முடிவிற்கு காரணமாக அமைந்தது.

சென்னையுமே பேட்டிங்கையே பெரிதாக நம்பி வலுவான பேட்டிங் லைன் அப்போடு களமிறங்கியது. அணியின் 11 வீரர்களில் 9 பேர் நன்றாக பேட்டிங் ஆடக்கூடியவர்களாகவே இருந்தனர்.வலுவான 9 பேட்டர்களை கொண்ட அணியை வைத்துக்கொண்டு பேட்டிங்கிற்கு சாதகமான ஒரு மைதானத்தில் சென்னை அணி 20 ஓவர்களில் வெறும் 131 ரன்களை மட்டுமே எடுத்திருக்கிறதுஇப்போதைக்கு கொல்கத்தாவிற்கு எதிரான இந்த தோல்வியை நினைத்து பெரிதாக வருந்த தேவையில்லை. எவ்வளவு சீக்கிரம் வீரர்கள் அனைவரும் தங்கள் ரோலை உணர்ந்து முழு ஈடுபாட்டுடன் ஆட தொடங்குகிறார்களோ அவ்வளவு சீக்கிரம் வெற்றிப்பாதைக்கு திரும்பிவிடலாம்.