Saturday, December 21, 2024

GOAT படத்தின் கதை இதுதானா? வேற லெவல் வெங்கட் பிரபு பிளான்! தெறிக்க விடும் தளபதி

படம் வந்தாலும் அப்டேட் வந்தாலும் ஒரே மாதிரியான உற்சாகத்தை வெளிப்படுத்தக் கூடியவர்கள் விஜய் ரசிகர்கள்.

லியோ படத்தின் குறிப்பிடத்தக்க வெற்றிக்கு பின், தளபதி 68 படத்திற்கான அப்டேட்களுக்காக வெறித்தனமாக காத்திருந்த ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது GOAT படத்தின் FIrst Look. The Greatest Of All Time படத்தின் பெயர் தான் சுருக்கமாக GOAT என அழைக்கப்படுகிறது.

படத்தின் தலைப்பே ஹாலிவுட் rangeஇல் இருக்கிறதே என ஒரு தரப்பினர் புகழ, என்னதான் சொல்ல வருகிறார்கள் ஒன்றுமே connect ஆகவில்லையே என்றும் கடுப்பில் கமெண்டுகளை தெறிக்க விட்டு வருகின்றனர். புத்தாண்டு அன்று Second Look வெளியாகி சமூகவலைதளங்களில் ட்ரெண்ட் ஆனது. இந்நிலையில் 2019ஆம் ஆண்டு வெளியான GEmini Man திரைப்பட போஸ்டருடன் GOAT ஒப்பிடப்பட்டு வருகிறது.

இந்த பட போஸ்டரில் ஒரு Will Smith நடுத்தர வயது மற்றும் இளமையான தோற்றத்தில் double act செய்துள்ள நிலையில் அதே போல தான் GOAT படமும் இருக்கும் என நெட்டிசன்கள்.  நேர்காணல் ஒன்றில் வெங்கட் பிரபு, இளைய தளபதி மாதிரியான நபர் ஒருவர் ஏலியன்களிடம் மாட்டிக்கொண்டார் என்றால் விஜய் எப்படி இந்தக் கதையில் நடிப்பார் என்ற ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு அதிகமாக இருக்கும்.

மேலும், இங்கு காட்டும் மாஸை அங்கு ஏன் காட்டக்கூடாது என்றும் பகிர்ந்துள்ளார். இதனால், Alternate Dimension, Time Travel என்ற கோணத்தில் படம் இருக்கும் என எதிர்ப்பார்ப்புகள் அதிகரித்து வரும் நிலையில், சாமானிய மக்களுக்கு படம் புரியுமா என்ற கேள்விகளும் எழுந்தவண்ணம் உள்ளது. விஜயின் திரைப்பயணத்தில் GOAT படம் சொல்லி அடிக்குமா? சொதப்பி சறுக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Latest news