இலவசங்களை வாக்குறுதிகளாக வழங்குவதை தடுக்க வழி உள்ளதா? – உச்சநீதிமன்றம் கேள்வி

311

இலவசங்களை வாக்குறுதிகளாக வழங்குவதை தடுக்க வழி உள்ளதா என உச்சநீதிமன்றம் வாய்மொழியாக கேள்வி எழுப்பியுள்ளது. அரசியல் கட்சிகள் இலவசங்களை வழங்குவதற்கு தடை விதிக்க வேண்டும் என அஷ்வினி உபாத்யாய் என்பவர் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்த வழக்கில் சில சட்ட ரீதியான கேள்விகள் எழுவதால், இலவச அறிவிப்புகளை வெளியிடுவதற்கு உடனடியாக தடை விதிக்க முடியாது என்று தெரிவித்தனர். வாக்கு வங்கிக்காக “இலவசங்கள்” என்ற வாக்குறுதியைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தான் வழிவகை செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையம் தங்களது தரப்பு வாதங்களை முன் வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.