32 லட்சம் ரூபாய்க்கு ஐபோன் ஏலம்

138

2007ஆம் ஆண்டு அறிமுகமான ஐபோன் 32 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த 2007ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் முதன்முறையாக ஐபோனை அறிமுகம் செய்தார். இந்த நிலையில் 15 ஆண்டுகள் கடந்தும், முதன்முறையாக அறிமுகமான ஐபோன் 32 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது. 15 ஆண்டுகள் அன்பாக்ஸ் செய்யப்படாமல் சீலுடன் புத்தம், புதிதாக வைக்கப்பட்டிருந்த 8GB  ஸ்டேரேஸ், 2 MP கேமரா கொண்ட இந்த ஐபோன் தற்போது ஏலம் போனது.

அப்போது 49 ஆயிரத்து 719 ரூபாய்க்கு மட்டுமே விற்கப்பட்ட இந்த ஐபோன், தற்போது அதிக தொகைக்கு ஏலம் போனது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த தகவலை அறிந்த பலரும் 15 ஆண்டுகள் கடந்தும் ஐபோனுக்கு மவுசு குறையவில்லை என கருத்து தெரிவித்து வருகின்றனர்.