மாணவி தற்கொலை வழக்கில் விசாரணை வெளிப்படை தன்மையுடன் நடந்து வருகிறது – ஆல்பி ஜான் வர்கீஸ்

272
Advertisement

மாணவி தற்கொலை வழக்கில் விசாரணை வெளிப்படை தன்மையுடன் நடந்து வருவதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

திருவள்ளுர் அடுத்த மப்பேடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட  கீழச்சேரி ஊராட்சியில், அரசு நிதி உதவி பெறும் மகளிர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த 12 ஆம் வகுப்பு மாணவி, வகுப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், மாணவி தற்கொலை வழக்கில் விசாரணை வெளிப்படை தன்மையுடன் நடந்து வருவதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து திருவள்ளூரைச் சேர்ந்த பள்ளி மாணவி மரணம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பள்ளி மாணவி தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்ப்டட நிலையில், திருவள்ளூர் மாவட்ட சிபிசிஐடி காவல் ஆய்வாளர் திரிபுர சுந்தரி, விசாரணை அதிகாரியாக நியமித்து, டிஜஜி சத்ய பிரியா உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, மாணவி தங்கி இருந்த விடுதியில் சிபிசிஐடி விசாரணை நடத்தினர்.