னித உடலில் நரம்பை எளிதில் கண்டறிவதற்கான புதிய தொழில்நுட்பம் அறிமுகம்

220

மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மனித உடலில் நரம்பை எளிதில் கண்டறிவதற்கான, புதிய தொழில்நுட்பம் வரவேற்பை பெற்றுள்ளது.
மருத்துவமனையில் குளுக்கோஸ் மற்றும் நரம்பு ஊசி போடுவதற்கு, உடலில் நரம்பை கண்டறிவது பல நேரங்களில் சிரமமான ஒன்றாக உள்ளது. இதனால் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கோபம் அடைவதால், பாதிக்கப்படுவது என்னவோ நோயாளி தான். இதனால், மருத்துவ பணியாளர்கள் பல முறை உடலில் நரம்பை தேடி, ஊசியால் துளையிடும் பல சம்பவங்கள், திரைப்படங்களிலும் நகைச்சுவையாக இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மனித உடலில் நரம்பை எளிதில் கண்டறிவதற்கான, புதிய தொழில்நுட்பம் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த புதிய தொழில்நுட்பம் மூலம் உடலில் ஊசி செலுத்தும் வீடியோ சமூகவலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.