இன்ஸ்டாகிராம் உலகளவில் முடங்கியதால், பயனாளர்கள் கடும் அவதி

187

பிரபல சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் உலகளவில் முடங்கியதால், பயனாளர்கள் கடும் அவதி அடைந்தனர்.

இளைஞர்களிடையே மிகப் பிரபலமான சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் உலகளவில் திடீரென முடங்கியது. இதை தொடர்ந்து அதனை பயன்படுத்த முடியவில்லை என ட்விட்டர் போன்ற பிற சமூக வலைத்தளங்களில் பயனர்கள் பலர் புகார் தெரிவித்தனர். தங்களது கணக்குகள் தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக, இன்ஸ்டாகிராம் பயனர்கள் புகார் அளித்துள்ளனர்.

மேலும் சிலர் தங்களது கணக்குகளில் பின்தொடரும் நபர்களின் எண்ணிக்கை பெரிதும் குறைந்து வருவதாகவும், பெரிய வீழ்ச்சியைக் காட்டுவதாகவும் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இந்தப் புகார் குறித்து இன்ஸ்டாகிராம் நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இன்ஸ்டாகிராம் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், சிலருக்கு இன்ஸ்டாகிராம் கணக்கை அணுகுவதில் ஏற்பட்டுள்ள சிக்கலை சரி செய்ய, நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.