அரிசியில் உள்ள புழு, வண்டுகளை அழிக்கும் மலிவான வீட்டுப் பொருட்கள்…

32
Advertisement


நாம் தினமும் பயன்படுத்தும் உணவுப்பொருட்களில் அரிசியும் ஒன்று, ஆனால் சில நேரங்களில் அரிசியில் புழுக்கள், பூச்சிகள், வண்டுகள் என பல வகையான விஷயங்கள் உள்ளன, இதனால் அரிசி கெட்டுப் போகிறது.

எனவே இந்தப் பிரச்சனையில் இருந்து விடுபட என்ன செய்யலாம் எனப் பார்ப்போம்.
கிராம்பு ஒரு கிருமி நாசினியாகப் பயன்படுத்தப்படுகிறது, எனவே இதனை அரிசியோடு கொஞ்சம் கலந்துவிட்டால் வண்டுகள் வராது. ஏனெனில் கிராம்பு வாசனைமிக்க ஒரு மூலிகையாகவும் இருக்கிறது.
சூரிய ஒளியில் பல விதமான நன்மைகள் உள்ளன, எனவே சூரிய ஒளி படும் படி அரிசியை காய வைத்து எடுக்கலாம். இவ்வாறு செய்யும்போது புழு, வண்டு ஆகிவை இறந்து விடும் .


4 முதல் 5 பிரியாணி இலைகளை எடுத்து அரிசியில் போட்டு வைத்தால் மிகவும் நல்லது. இதன் வாசம் புழு, வண்டு என அனைத்தையும் அரிசியின் அருகில் வருவதை தடுக்கும்.
வெள்ளைப் பூண்டின் வாசத்திற்கும் புழு, பூச்சி மற்றும் வண்டுகள் வராது. எனவே இதையும் அரிசியுடன் கலந்து வைக்கலாம்.
அதுபோல பல உணவுப் பொருட்களை பாதுகாப்பதற்காக குளிர்சாதனப் பெட்டியில் வைப்பதைப் போல, சுத்தம் செய்யப்பட்ட அரிசியை பூச்சிகள் நெருங்காதபடி அதை பிரிஜ்ஜில் வைக்கலாம்.