Advertisement

இந்தோனேசியாவில் அதிக அளவில் பாமாயில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மேலும், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் சாக்லேட் பயன்பாட்டுக்கு கச்சா பாமாயில் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இதனிடையே, இந்தோனேஷாயாவில் சமையல் எண்ணெய் பற்றாக்குறை நிலவியதால், பாமாயில் ஏற்றுமதிக்கு தடை விதித்து இந்தோனேஷியா அதிபர் ஜோகோ விடோடோ உத்தரவிட்டார்.

இந்நிலையில், இந்தோனேஷியாவில் தற்போது 60 லட்சம் டன் பாமாயில் கையிருப்பில் உள்ளதால், ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை பரிசீலிக்குமாறு அரசுக்கு எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து, பாமாயில் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை வரும் 23 ஆம் தேதி முதல் விலக்கப்படுவதாக இந்தோனேஷியா அரசு அறிவித்துள்ளது.