இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோவின் 2021 -22 நிதியாண்டின் வருவாய் அதிகரிப்பு.

211

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோவின் 2021 -22 நிதியாண்டின் வருவாய் 76 ஆயிரத்து 977 கோடியாகவும், லாபம் 14 ஆயிரத்து 817 கோடியாகவும் அதிகரித்துள்ளது. இது முந்தைய நிதியாண்டின் லாபத்தை விட 2 ஆயிரத்து 802 கோடி ரூபாய் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் உடன் முடிந்த முதல் காலாண்டில் ஜியோ 4 ஆயிரத்து 335 கோடி லாபத்தை பதிவு செய்துள்ளது. இது கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் 3 ஆயிரத்து 501 கோடியாக இருந்தது. இதன் மூலம் ஜியோவின் லாபம் 23.8 சதவீதம் அதிகரித்துள்ளது. மார்ச் உடன் முடிந்த கடந்த 2021 – 22-ன் நான்காம் காலாண்டில் 4 ஆயிரத்து 173 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது.