மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது

206
Advertisement

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 119 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தியா – மேற்கிந்திய தீவுகள் இடையேயான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் ஆடிய இந்திய அணி, 24 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி 40 ஓவர்களாக குறைப்பட்டு மீண்டும் தொடங்கியது. இந்திய அணி 36 ஓவர்களில் 225 ரன்கள் எடுத்திருந்த போது, மீண்டும் மழை குறுக்கிட்டது.

இதையடுத்து டக்வர்த் லீவிஸ் முறைப்படி மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற, 35 ஓவர்களில் 257 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதனால் 98 ரன்கள் எடுத்திருந்த இந்திய வீரர் சுப்மான் கில்லின் சதம் அடிக்கும் வாய்ப்பு பறிபோனது. இதைதொடர்ந்து களம் இறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 26 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 ரன்களுக்கு சுருண்டது.

Advertisement

இதன் மூலம் இந்திய அணி 119 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேலும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் இந்திய அணி முழுமையாக கைப்பற்றியுள்ளது.