புதிய சாதனையைப் படைத்த இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா

16

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 3 ஆயிரம் ரன்களைக் கடந்த வீராங்கனை என்ற சாதனையைப்  இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார்.

இந்தியா – இங்கிலாந்து மகளிர் அணிகள் மோதிய 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் ஆடிய இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 333 ரன்கள் குவித்தது. இதைதொடர்ந்து கடின இலக்கை நோக்கி களம் இறங்கிய இங்கிலாந்து மகளி அணி, 45 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 245 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய மகளிர் அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதனிடையே, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 3 ஆயிரம் ரன்களைக் கடந்த வீராங்கனை என்ற சாதனையைப்  இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார். இதற்கு முன்பு இரண்டு இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் இந்த சாதனையைப் படைத்திருந்தார். அவர் 88 போட்டிகளில் 3 ஆயிரம் ரன்கள் என்ற இலக்கை எட்டினார்.

Advertisement

ஆனால் ஸ்மிருதி மந்தனா 76 போட்டிகளில் இந்த இலக்கை எட்டி சாதனை படைத்துள்ளார். இதனால் மகளிர் கிரிக்கெட்டில் மிகக் குறைந்த போட்டிகளில் 3 ஆயிரம் ரன்களை எட்டிய வீராங்கனை என்ற பெருமையை ஸ்மிருதி பெற்றார்.