மூவர்ண தேசியக் கொடியை கைகளால் தீட்டி சாதனை

flag
Advertisement

புதுச்சேரி விழிகள் கல்வி மற்றும் பசுமை அறக்கட்டளை சார்பில், பள்ளி மாணவிகள் கைகள் மூலம் மூவண்ண தேசியக் கொடியை தீட்டும் சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.

கரையாம்புத்தூரை சேர்ந்த 7 ஆம் வகுப்பு மாணவி தீக்சிதா, 3 ஆம் வகுப்பு மாணவி வர்ணிதா ஆகிய இருவரும் 19 மணி நேரம் 30 நிமிடத்தில், 28 அடி அகலம், 133 அடி நீளத்திற்கு கைகளால் மூவர்ண்ண தேசியக்கொடியை தீட்டி சாதனை படைத்தனர்.

ஒலிம்பிக் போட்டியில் வெற்றிபெற்ற வீரர்களை கவுரவிக்கும் வகையில், தேசியக்கொடியை கைகளால் தீட்டியதாக மாணவிகள் தெரிவித்தனர்.

பள்ளி மாணவிகளின் சாதனையை பாராட்டி, சட்டமன்ற உறுப்பினர்கள் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர்

Advertisement