2வது டி20 போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் இன்று மோதல்

26

2வது டி20 போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் இன்று மோத உள்ளன. முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டதால் இன்றைய போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ளது.

ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்திய அணி டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இரு அணிகள் இடையேயான முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும், 2வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி இன்று மதியம் 12 மணிக்கு நடைபெற உள்ளது. ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி 20 ஓவர் தொடரை வெற்றியுடன் தொடங்குமா? என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Advertisement