டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், நேற்று நடந்த 3 ஆட்டங்களில், இந்தியா முதல் தோல்வியை சந்தித்துள்ளது. அதேபோல், பாகிஸ்தான் முதல் வெற்றியை பெற்றுள்ளது.
8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில், சூப்பர் 12 சுற்று ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகிறது . நேற்று நடைபெற்ற போட்டியில் முன்னாள் சாம்பியன் இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடின. இந்திய அணி டாஸ் வென்றதை அடுத்து, தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா- கே.எல் ராகுல் களமிறங்கினர். தென் ஆப்பிரிக்கா அணியின் சிறப்பான பந்துவீச்சால் பவர்பிளேவில் இந்திய அணியால் அதிரடி காட்ட முடியவில்லை.
இந்திய அணி 20 ஓவர் முடிவில், 9 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து, 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. இதில், தென் ஆப்பிரிக்க அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தின் மூலம் இந்திய அணி தனது முதல் தோல்வியை சந்தித்துள்ளது. இதன்மூலம் இந்திய அணியை பின்னுக்குத் தள்ளி B பிரிவு புள்ளிப் பட்டியலில் தென் ஆப்பிரிக்கா அணி முதலிடம் பிடித்துள்ளது.