அவுஸ்திரேலிய வேகப் பந்து வீச்சில் திணறும் இந்தியா – கோலி, கில், சர்மா ஆட்மிழப்பு…!

212
Advertisement

இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடி வரும் இந்திய அணி தடுமாற்றத்தை எதிர்கொண்டுள்ளது.

சற்று முன்னர் வரை 97 ஓட்டங்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி துடுப்பெடுத்தாடி வருகின்றது.

இந்திய அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர்களான ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி மற்றும் புஜாரா ஆகியோர் மிகவும் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்துள்ளனர்.

முன்னதாக தனது முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 469 ஓட்டங்களை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடி வரும் இந்திய அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 37 ஓட்டங்களை பெற்றுள்ளது.

லண்டன் ஓவல் மைதானத்தில் இடம்பெறும் இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் பந்து வீசியதன் மூலம் வெற்றிபெற்றது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா தனது முதல் இன்னிங்சில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 469 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அவுஸ்திரேலிய அணியின் முதல் மூன்று விக்கெட்டுகளும் 75 ஓட்டங்களுக்குள் வீழ்த்தப்பட்ட போதிலும், நான்காவது விக்கெட்டுகாக ஜோடி சேர்ந்த ஸ்டீவன் ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் இந்திய பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்தனர்.

இருவரும் சதம் அடித்ததுடன், அவுஸ்திரேலியா அணி பரிய ஓட்டங்களை குவிக்க பங்களித்தனர். டிராவிஸ் ஹெட் 163 ஓட்டங்களையும், ஸ்டீவன் ஸ்மித் 121 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

போட்டியின் முதல் நாள் ஆட்ட முடிவில் அவுஸ்திரேலியா அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து 327 ஓட்டங்களைப் பெற்றது. ஸ்டீவன் ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இரண்டாம் நாளான இன்று தனது முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி மேலும் 142 ஓட்டங்களை பெற்றிருந்த போது எஞ்சிய விக்கெட்டுகளை இழந்தது.

இந்திய அணி சார்பில் மொகமட் சிராஜ் நான்கு விக்கெட்டுகளையும், மொகமட் சாமி மற்றும் ஷர்துல் தாகூர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.

பதிலுக்கு தனது முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடி வரும் இந்திய அணி தேனீர் இடைவேளையின் போது 37 ஓட்டங்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்துள்ளது.

ரோகித் சர்மா 15 ஓட்டங்களையும், சுப்மன் கில் 13 ஓட்டங்களையும் பெற்ற போது ஆட்டமிழந்துள்ளனர். தற்போது விராட் கோலி மற்றும் புஜாரா ஆகியோர் களத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.