2வது நாளாக இன்றும் சரிவு

190

வார தொடக்கத்தின் முதல் நாளிலே பங்கு வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது.

இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு 330 புள்ளிகள் சரிவடைந்து 52,500 புள்ளிகள் என்ற அளவில் இருந்தது.

இதே போல தேசிய பங்குச்சந்தையிலும் நிப்டி குறியீடு 413 புள்ளிகள் சரிவடைந்து 15,800 புள்ளிகளாக குறைந்து காணப்பட்டது.

Advertisement

இதனால், தகவல் தொழில் நுட்பம், ரியல் எஸ்டேட், பொதுத் துறை வங்கிகள், தானியங்கி துறை, எண்ணெய் மற்றும் எரிவாயு உள்ளிட்ட அனைத்து பங்கு வர்த்தகங்களும் 2 முதல் 3 சதவீதம் வரை சரிவடைந்து நஷ்டத்துடன் காணப்பட்டன.

தற்போது இரண்டாவது நாளாக பங்கு சந்தை வர்த்தகம் சரிவுடன் தொடங்கியிருப்பதால் முதலீட்டாளர்களை அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இருந்த போதிலும், சென்செக்ஸ் குறியீட்டில் பார்தி ஏர்டெல் நிறுவனம் உட்சபட்ச லாபத்துடன் காணப்படுகிறது, அதை தொடர்ந்து பவர் கிரிட், மகிந்திரா அண்டு மகிந்திரா மற்றும் என்.டி.பி.சி. ஆகியவை லாபத்துடன் உள்ளன.

இதில் ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம் உள்ளிட்ட சில நிறுவனங்களின் பங்குகள் மிக மோசமான சரிவை சந்திந்துள்ளது.

தொடர்ந்து எல்.ஐ.சியின் பங்குகளும் சரிவையே சந்தித்து வருகிறது.