இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில், 35 ஆயிரத்து 499 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 கோடியே 19 லட்சத்து 69 ஆயிரத்து 954 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தாக்குதலுக்கு மேலும் 447 பேர் உயிரிழந்ததால், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 28 ஆயிரத்து 309 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 39 ஆயிரத்து 686 பேர் குணமடைந்துள்ளதால், குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 11 லட்சத்து 39 ஆயிரத்து 457 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் நாடு முழுவதும் 4 லட்சத்து 2 ஆயிரத்து 188 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.