சற்று குறைந்த தினசரி பாதிப்பு

306

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 714 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.

இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்து 85 ஆயிரத்து 49 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவில் இருந்து 2 ஆயிரத்து 513 பேர் குணமடைந்ததால், குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 26 லட்சத்து 33 ஆயிரத்து 365 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 7 பேர் பலியானதால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 5 லட்சத்து 24 ஆயிரத்து 708 ஆக பதிவாகியுள்ளது.

கொரோனா பாதிப்புக்கு தற்போது 26 ஆயிரத்து 976 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.