தினசரி பாதிப்பு அதிகரிப்பு

249

சமீப காலமாக கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பின்படி, 4 ஆயிரத்து 270 பேருக்கு தொற்று பாதிப்பு பதிவானது.

இன்று வெளியிட்ட அறிவிப்பின்படி, கொரோனா பாதிப்பு அதிகரித்து, இன்று புதிதாக 4 ஆயிரத்து 518 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்புக்கு இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 24 ஆயிரத்து 701 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 25 ஆயிரத்து 782 ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 779 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தனர்.