தினசரி பாதிப்பு அதிகரிப்பு

413

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து, 2 ஆயிரத்து 628 ஆக பதிவாகி உள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 2 ஆயிரத்து 628 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்து 44 ஆயிரத்து 820 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 2 ஆயிரத்து 167  பேர் குணமடைந்ததால், குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 26 லட்சத்து 4 ஆயிரத்து 881 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவுக்கு மேலும் 18 பேர் பலியானதால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 5 லட்சத்து 24 ஆயிரத்து 525 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்புக்கு தற்போது 15 ஆயிரத்து 414 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.