மெட்ரோ ரயிலில் பயணிப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு

12

மெட்ரோ ரயிலில் பயணிப்போர் எண்ணிக்கை 2.30 லட்சமாக அதிகரித்துள்ளது. இதுகுறித்து பேசிய   மெட்ரோ ரயில் நிறுவன நிர்வாக இயக்குனர் எம்.ஏ.சித்திக், சென்னையில் லண்டன், ரோம் நகரங்களைவிட கூடுதலாகவும், சிங்கப்பூர், தென்கொரியா தலைநகர் சியோல், சீனா தலைநகர் பீஜிங் மற்றும் ஷாங்காயில் இயக்கப்படும் மெட்ரோ ரெயில்கள் போன்றும் சர்வதேச தரத்தில் மெட்ரோ ரெயில் சேவை நடைபெறுவதாக கூறினார்.

பாதுகாப்பு, நேரந்தவறாமை, களைப்பின்மை, சொகுசு பயணம் அளிக்கப்படுவதால் தற்போது நாள் ஒன்றுக்கு 2.30 லட்சமாக பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.