இந்தியாவின் ராணுவ தளவடாங்கள் ஏற்றுமதி அதிகரிப்பு

306

கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் ராணுவ தளவடாங்கள் ஏற்றுமதி  334 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உலகின் மிகப்பெரிய பாதுகாப்பு ராணுவ தளவாடங்களை இறக்குமதி செய்யும் நாடுகளில் இருந்து, இந்தியா தற்போது ஏற்றுமதியாளராக வளர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கூட்டு முயற்சியின் விளைவாக தற்போது இந்தியாவில் இருந்து 75 நாடுகளுக்கு ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி செய்யப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

2020-21-ல் இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி 8 ஆயிரத்து 434 கோடி ரூபாய் என கூறப்பட்டுள்ளது. மேலும், உலக அளவில் ராணுவ தளவாட உற்பத்தியில், முதல் 5 இடங்களை பிடிக்க இந்திய இலக்கு நிர்ணயித்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.