மின்வேலியில் சிக்கி காட்டு யானை உயிரிழந்த சம்பவம் – 4 வனத்துறை ஊழியர்கள் சஸ்பெண்ட்

269

மேட்டூர் அருகே மின்வேலியில் சிக்கி காட்டு யானை உயிரிழந்த சம்பவத்தில், வனத்துறை ஊழியர்கள் 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த ஆலமரத்துப்பட்டி கிராமத்தில் புஷ்பநாதன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் மின்வேலி அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 24ஆம் தேதி இந்த மின்வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழந்தது. இந்த சம்பவம் குறித்து மாவட்ட வனத்துறை சார்பில் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் வனவிலங்குகளை பாதுகாப்பதில் மெத்தனப் போக்குடன் செயல்பட்டதாக வனத்துறை ஊழியர்கள் 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேட்டூர் வனச்சரகர் அறிவழகன், வனச்சரகர் சக்திவேல், வனவர் ரகுநாத், வணக்கப்பாளர் பத்ரன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்