ஒடிசாவின் ஜஜ்பூர் சாலை பகுதியில் இன்ஜின் இல்லாமல் சரக்கு ரயிலின் பெட்டிகள் பாதுகாப்பு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த நிலையில், ரயில்வே பணிக்காக ஒப்பந்த அடிப்படையில் சில தொழிலாளர்கள் வேலையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது, இடி மின்னலுடன் கனமழை பெய்ததால் ஒப்பந்த தொழிலாளர்கள் ரயில் பெட்டி அருகே ஒதுங்கி உள்ளனர். பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டிகள் திடீரென தொழிலாளர்கள் மீது உருண்டு விழுந்ததில் 6 பேர் உயிரிழந்தனர்.
இருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கடந்த 2ஆம் தேதி பாகநாகா பஜார் ரயில் நிலையம் அருகே ஷாலிமார் – சென்னை கோரமண்டல் ரயில் விபத்து சம்பவம் உலகையே உலுக்கியது. இந்த விபத்தில் 275 பேர் உயிரிழந்த நிலையில், ஆயிரத்து 175 பேர் காயமடைந்தனர்.
அதன் பிறகு கடந்த 5ஆம் தேதி சரக்கு ரயில் பெட்டிகள் தடம் புரண்டது. கடந்த 5 நாட்களில் மட்டுமே அடுத்தடுத்து மூன்று விபத்துகள் நடந்துள்ளன.