பிரதமர் மோடி மற்றும் யோகி ஆதித்யநாத்தை தனது மனைவி ஆதரித்ததற்காக, உத்தரபிரதேசத்தில் ஒருவர் தனது மனைவிக்கு முத்தலாக் கொடுத்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது

145

பிரதமர் மோடி மற்றும் யோகி ஆதித்யநாத்தை தனது மனைவி ஆதரித்ததற்காக, உத்தரபிரதேசத்தில் ஒருவர் தனது மனைவிக்கு முத்தலாக் கொடுத்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. பிரதமர் மோடி மற்றும் யோகி ஆதித்யநாத்துக்கு வாக்களித்ததால், தனது கணவர் மற்றும் மாமியார் கொடுமைப்படுத்தியதாக, பாதிக்கப்பட்ட பெண், காவல்துறையில் புகார் அளித்துள்ளார். தனது கணவர் முத்தலாக் சொல்லி தன்னை வீட்டைவிட்டு வெளியேற்றிவிட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளனர்.